ஊடகவியலாளர் பிரகாஷ் ஞானபிரகாசம் காலமானார்

03.09.2021 07:15:26

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் பிரகாஷ் ஞானபிரகாசம், கொவிட் தொற்றினால் நேற்று உயிரிழந்தார்.

கொடிகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்தார்.

சுயாதீன ஊடகவியலாளராக அவர் செயற்பட்டிருந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொவிட்-19 தொற்றுறுதியானது.

இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்