திருச்சியில் விஜய்!.

01.06.2026 08:24:16

திருச்சி தொகுதியில் தனக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி சொல்வதற்காக தமிழக முதல்வர் விஜய் இன்று திருச்சி செல்லவிருக்கிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக பெற்று ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் தலைவர் விஜய் கடந்த 10ம் தேதி முதலமைச்சராக பதவியேற்றார். முதல்வர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். இதில் பெரம்பூர் தொகுதியை தனக்கு வைத்துக்கொண்டு திருச்சி கிழக்கில் ராஜினாமா செய்தார்..

இந்நிலையில்தான், இன்று அவர் திருச்சி செல்கிறார். திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் முதல்வர் பேசவிருக்கிறார். அந்த கல்லூரி மைதானத்தில் பொதுமக்கள் அமர்வதற்காக பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த விழாவில் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். பாதுகாப்பு கருதி கர்ப்பிணிகள், சிறுவர் சிறுமிகள், வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு இந்த நிகழ்ச்சியில் அனுமதி இல்லை என சொல்லப்பட்டிருக்கிறது.