அஜித்துடன் பில்லா-3?
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அஜித். இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் விடாமுயற்சி படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை வருகிற 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடவுள்ளனர். அஜித்தின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவர் விஷ்ணு வர்தன். |
பில்லா, ஆரம்பம் என இரண்டு சூப்பர்ஹிட் படங்களை இயக்குனர் விஷ்ணு வர்தன் இயக்கியுள்ளார். இவர்களுடைய கூட்டணி மீண்டும் எப்போது இணையும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், சமீபத்தில் விஷ்ணு வர்தன் விழா ஒன்றில் பங்கேற்றுள்ளார். அப்போது, பில்லா 3 குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு "பில்லா 3 பண்ணல, அதுக்கு பதிலா அஜித் சார் கூட வேறொரு படம் பண்ணலாம்" என கூறியுள்ளார். பின் அஜித் - விஷ்ணு வர்தன் - யுவன் காம்போ மீண்டும் எப்போது இணையும் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த இயக்குனர் விஷ்ணு வர்தன் "பேசிட்டு இருக்கோம்" என கூறியுள்ளார். இது அஜித் ரசிகர்களுக்கு செம மாஸ் அப்டேட்டாக வந்துள்ளது. |