புதிய அமைச்சரவை நியமனம்!

07.04.2022 08:05:00

புதிய அமைச்சரவையை நியமிப்பது குறித்து பிரதமருடனான சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் மேஜர் பிரதீப் உந்துகொட தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்றிரவு அலரிமாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று அல்லது நாளை புதிய அமைச்சரவை பொறுப்பேற்கவுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.