நேரடி விவாதம் பிரதமர் மோடிக்கு இம்ரான் அழைப்பு
23.02.2022 10:54:52
புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் இருந்து இந்தியா - பாகிஸ்தான் உறவில், மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது.
அந்த நாட்டுடனான வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து பொருளாதார ரீதியிலான உறவுகளையும் இந்தியா துண்டித்துள்ளது.
இந்நிலையில், இந்தியா உடனான வர்த்தக உறவை மீண்டும் தொடங்க விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.
ரஷ்ய பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘இந்தியா உடனான அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பது தொடர்பாக, பிரதமர் மோடியுடன் நேரடி விவாதம் நடத்த தயாராக இருக்கிறேன்.
அனைத்து உலக நாடுகளுடனும் வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதே பாகிஸ்தானின் விருப்பம். ஆனால், இந்தியா எதிரி நாடாகி விட்டதால், அதன் உடனான வர்த்தகம் குறைந்து விட்டது,’’ என்றார்.