இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் உரங்களை வழங்குவதற்கு மோடி இணக்கம்

02.06.2022 05:38:45

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் யால பருவத்திற்கான உரங்களை வழங்குவதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி  இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ   தெரிவித்துள்ளார்.

நீர்ப்பாசனத் துறை எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் தீர்வுகள் தொடர்பில் நேற்று  பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே கோட்டாபய இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த உரமானது இந்திய கடனுதவியுடன் வழங்கப்படுவதுடன், இலங்கைக்கு கிடைத்த 20 நாட்களுக்குள் இதனை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.