பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்.

13.07.2026 13:14:12

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2008-ஆம் ஆண்டு இடம்பெற்ற தொடர் படுகொலைகள் தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், ‘பிள்ளையான்’ என்று அழைக்கப்படுபவர், மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை ஜூலை 24-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் திங்கட்கிழமை (13) உத்தரவிட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சந்திரகாந்தன், காணொளி தொழில்நுட்பம் (video conference) ஊடாக திங்கட்கிழமை (13) அன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

2008-ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற ஐந்து படுகொலைகள் தொடர்பாக, பிள்ளையான் மற்றும் அவருடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) வழக்குத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.