பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள எச்சரிக்கை

21.08.2021 07:06:00

தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறுவோரைக் கைது செய்ய விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த விசேட நடவடிக்கையானது நேற்றிரவு முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், இதற்காக தனி பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா பரவல் நிலை தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று(20) இரவு 10 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.