அமெரிக்கா மற்றும் சீனா இடையில்,மேலும் பதட்ட நிலைமையை உருவாக்கும் !
அமெரிக்க மற்றும் தாய்வான் அதிகாரிகளுக்கிடையிலான தொடர்புகள் குறித்த நீண்டகால கட்டுப்பாடுகளை அமெரிக்கா நீக்கியுள்ளது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.
சீனாவை பழிவாங்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை அடிப்படையாக கொண்டு, பல தசாப்தங்களுக்கு முன்னர் குறித்த கட்டுப்பாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த முடிவு சீனாவை ஆத்திரமூட்டும் செயலாக அமைந்துள்ள நிலையில் குறித்த கட்டுப்பாடுகள் தற்போது அமுலில் இல்லை என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் போம்பியோ சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியான ஜே பைடன் பதவியேற்கவுள்ள நிலையில், டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் இவ்வாறான தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, இந்தத் தீர்மானம் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையில், மேலும் பதட்ட நிலைமையை உருவாக்கும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கன்றன.