"என் குழந்தைகள் அப்படித்தான் ஆகணும்"

19.12.2024 07:03:00

நயன்தாரா இன்று தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர், தற்போது இவர் ராக்காயி என்ற மிரட்டல் ஆக்‌ஷன் படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் நடிப்பதை தாண்டி தன் குழந்தைகள் மற்றும் கணவருடன் நேரத்தை செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் நயன்தாரா. அவ்வப்போது ஷூட்டிங் நடைபெறும் இடத்திற்கு தன்னுடைய குழந்தைகளையும் அழைத்து சென்று கவனமுடன் வளர்த்து வருகிறார்

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய நயன்தாரா தன் குழந்தைகள் குறித்தும் அவர்கள் எப்படி வளர வேண்டும் என்பதை குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில், " என் குழந்தைகள் இருவரும் மிகவும் பணிவாக, அனைவரிடமும் அன்புடன் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

அதனால், அவர்கள் தூங்கும்போது காதில் மற்றவர்களிடம் கருணையுடன், அன்புடன் இருக்க வேண்டும் என்று கூறுவேன். அப்படி பேசுவதை நமது உடலும் ஆத்மாவும் ஏற்று அதன்படியே செயல்படும் என்று மருத்துவர்கள் வரவேற்கின்றனர்" என கூறியுள்ளார்.