ஊழியர்களுக்கான காப்பீட்டுத் தொகை 20 இலட்சம் ரூபாவாக அதிகரிப்பு

25.02.2022 05:49:43


பணியின்போது விபத்துக்களால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச தொழிலாளர் இழப்பீட்டுத் தொகை  20 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தொழில் அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டத்தின்போது, இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பணியில் இருக்கும் போது விபத்துக்களால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு மரணம் அல்லது பூரண இயலாமை ஏற்பட்டால் வழங்கப்படும் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை 550,000  ரூபாவாக காணப்பட்டது  தற்போது இந்தத் தொகை 20 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.