'தக் லைப்' முதல் நாள் வசூல்!

07.06.2025 00:16:48

கமல் - மணிரத்னம் கூட்டணி நீண்ட காலத்திற்கு பிறகு மீண்டும் இணைந்து இருக்கும் படம் தக் லைப். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று படம் ரிலீஸ் ஆன நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் தங்களை படம் கவரவில்லை என்று தான் கமெண்ட் செய்து வருகின்றனர்.

முதல் நாளே படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் வர தொடங்கி இருப்பதால் வசூலும் பெரிய பாதிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தக் லைப் படம் முதல் நாள் சென்னையில் பெற்றிருக்கும் வசூல் பற்றிய விவரம் வந்திருக்கிறது. சென்னையில் மட்டும் 1.7 கோடி ரூபாய் தக் லைப் வசூலித்து இருக்கிறதாம்.