ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்ச பதவி விலகினார்

16.01.2023 21:52:09

ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்ரினா லம்பிரஸ்ட் பதவி விலகியுள்ளார்.

பாரிய தவறுகளை இழைத்தமை மற்றும் பொதுத் தொடர்பாடல்களில் ஏற்பட்ட கடுமையான பின்னடைவு ஆகியவற்றை தொடர்ந்து அவரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உக்ரைன் போரின் பின்னணி

ஜேர்மனியால் தயாரிக்கப்பட்டுள்ள யுத்த தாங்கிகளை உக்ரைனுக்கு வழங்க வேண்டும் என்ற அழுத்தங்கள் அதிகரித்துவரும் நிலையில், அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் பதவி விலகியுள்ளார்.

5 ஆயிரம் இராணுவ தலைக் கவசங்களை வழங்குவதன் மூலம் உக்ரைனுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக கிறிஸ்ரினா லம்பிரஸ்ட் வெளியிட்ட அறிவிப்பினால் அவர் கேலிக்கு உள்ளாகியிருந்தார்.

மோசமான நிலையில் உள்ள ஜேர்மனியின் ஆயுதப் படையை மேம்படுத்த தவறியமை தொடர்பிலும் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தார்.

உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு பின்னரான செயற்பாடுகளுக்காக 100 பில்லியன் யூரோவை வழங்கியிருந்த நிலையில், ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சரின் பதவி விலகல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.