தித்திக்கும் கரும்புச்சாறு பொங்கல்!

10.01.2023 22:12:35

இந்துக்களால் வருட ஆரம்பத்தில் விசேடமாக கொண்டாடப்படும் பண்டிகையே தைப்பொங்கல் ஆகும்.

இந்த பண்டிகையின் பொது தயார் செய்யப்படும் பொங்கல் பல புதுப்புது முறைகளில் இனிமையாக செய்வார்கள்.

அதில் ஒன்றுதான் கரும்புச்சாறு பொங்கல். இந்த பொங்கல் ஆனது சிறியவர் முதல் பெரியவர் வரை உள்ள அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவாகும்.

அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வீட்டிலே எளியமுறையில் செய்யக்கூடிய கரும்புச்சாறு பொங்கல் எப்படி செய்வது என்பதை இங்கே பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • பச்சரிசி - 1/4 கப்
  • பாசிப்பருப்பு - 1/8 கப்
  • கரும்புச்சாறு - 1 1/2 கப்
  • கற்கண்டு - 1/8 கப்
  • நெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

முதலில் கரும்பை எடுத்து, அதன் வெளித்தோலை நீக்கிவிட்டு, அவற்றை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்து, வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அரிசியை நீரில் கழுவி தனியாக வைத்துக் கொண்டு பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பைப் போட்டு பொன்னிறமாக வறுத்து அதில் அரிசியைப் போட்டு, கரும்பு சாற்றினை ஊற்றி கலந்து, குக்கரை மூடி குறைவான தீயில் வைத்து 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

 

விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் கற்கண்டை சேர்த்து நன்கு, கற்கண்டை கரைய விட வேண்டும். கற்கண்டுகள் நன்கு கரைந்ததும், கரண்டியால் நன்கு பொங்கலை மசித்து விட வேண்டும்.

அடுத்து அதில் ஏலக்காய் பொடியைத் தூவி கிளற வேண்டும். மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியைப் போட்டு வறுத்து, குக்கரில் உள்ள பொங்கலுடன் கிளறினால், சுவையான கரும்புச்சாறு பொங்கல் தயார்.