தமிழக அரசியலில் மெகா திருப்பம்.
தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாபெரும் மாற்றங்கள் நிகழ தொடங்கியுள்ளன. திமுக கூட்டணியில் அதிருப்தியில் இருந்த காங்கிரஸ், தற்போது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோர்க்கத் தயாராகி வருகிறது. ராகுல் காந்தியின் நேரடித் தூதுவர்கள் விஜய்யுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இக்கூட்டணியில் காங்கிரஸிற்கு 1 துணை முதல்வர் பதவி மற்றும் 6 அமைச்சரவை இடங்களை வழங்க விஜய் சம்மதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், வரும் மார்ச் 5-ம் தேதி ராகுல் காந்தி - விஜய் சந்திப்பு நிகழ வாய்ப்புள்ளது. 2029 பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் 25 இடங்களிலும், தவெக 15 இடங்களிலும் போட்டியிட உத்தேசமாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அதிரடி நகர்வு திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுக்கும் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.