சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி
திருச்செந்தூர் அருகே சிறுமியை வன்புணர்ச்சி செய்த வழக்கில் கைதான 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. போக்சோ சட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை 2 வாலிபர்கள் பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளனர். பின்னர், அதை வீடியோ பதிவு செய்து, வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் வைத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆலந்தலை தெற்கு தெருவை சேர்ந்த இனிகோ மகன் ஜெப்ரின் (வயது 25), பிரவிந்தன் மகன் ரெவின்டோ (23) ஆகியோரை திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் 2 பேரும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். குண்டர் சட்டம் இந்த 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், ஜெப்ரின், ரெவின்டோ ஆகிய 2 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.