மத்திய வளாகத்தினுள் பலவந்தமாக நுழைந்த 9 பேர் கைது!

08.08.2023 09:47:26

.இலங்கை மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்தவர்களில் 09 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண் ஒருவரும் 8 ஆண்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குத்தகை மற்றும் கடன் செலுத்துவோர் சங்கத்தின் உறுப்பினர்கள் குழுவொன்று இலங்கை மத்திய வங்கியின் வளாகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்துள்ளனர்.

இதன் காரணமாக அந்த இடத்தில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.