எடப்பாடி பழனிசாமி தற்போது பலவீனமாக இருக்கிறார்
06.11.2021 08:54:27
எடப்பாடி பழனிசாமி தற்போது பலவீனமாக இருக்கிறார்; அவரிடம் தடுமாற்றம், பயம் இருக்கிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்திருக்கிறார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமையகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் டி.டி.வி. தினகரன் ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது பேசிய அவர், ஜனநாயக ரீதியாக தேர்தலில் வெற்றி பெற்று அதிமுகவை மீட்டெடுப்போம் என்று குறிப்பிட்டார்.