
ஆயுதப்படைக்கு அநுரவின் அதிரடி உத்தரவு.
ஆயுதம் தாங்கிய படையினருக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.
இந்தநிலையில், நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தொடர்பில் ஜனாதிபதி அறிவித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
படையினருக்கும் அழைப்பு
நாடாளுமன்றத்தில் இன்று (08) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
நாற்பதாவது அதிகாரமான பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12 ஆம் பிரிவு மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு ஏற்ப ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் போது ஜனாதிபதியால் வழங்கப்பட்ட அறிவிப்புகளை சமர்ப்பிக்கும் போது சபாநாயகர் இந்த அறிவிப்பை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.