திரையுலகில் ராதிகாவின் 45 ஆண்டுகள் இடைவிடாத சாதனை.. கேக் வெட்டி கொண்டாட்டம்.

11.08.2023 10:23:15

நடிகை ராதிகா தமிழ், இந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் தேசிய விருது, பிலிம் பேர் விருது என பல விருதுகளை வென்றுள்ளார். மேலும் படிக்க தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான ராதிகா 1978-ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் இடம்பெற்றிருந்த 'பூவரசம்பூ பூத்தாச்சு' பாடல் இன்று வரை ரசிகர்கள் நினைவில் இருக்கும் பாடலாக உள்ளது. தொடர்ந்து இவர் தயாரித்து நடித்த 'மீண்டும் ஒரு காதல் கதை' திரைப்படம் இயக்குனரின் சிறந்த அறிமுகப் படத்திற்கான இந்திரா காந்தி விருதை வென்றது . நடிகை ராதிகா, தமிழ், தெலுங்கி, இந்தி என பல மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல தொடர்களை இயக்கி நடித்துள்ளார். தேசிய விருது, பிலிம் பேர் விருது என பல விருதுகளை குவித்துள்ள ராதிகா இன்றும் தன் நடிப்பு திறமையால் மிளிர்கிறார். இந்நிலையில், நடிகை ராதிகா திரைத்துறையில் அறிமுகமாகி 45 ஆண்டுகள் கடந்துள்ளது. இதனை அவர் தன் கணவர் சரத்குமாருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.