நா.உறுப்பினர் மூவர் முதலமைச்சர் பதவிக்காக பதவி துறப்பு !!

09.10.2021 15:04:41

2022ஆம் ஆண்டின் முற்பகுதியில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் அந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தற்போது நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் மூவர் இராஜிநாமா செய்வார்கள் எனத் தெரியவருகின்றது எனக் கொழும்பு  ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் கட்சி தலைமைகளுக்கு முன்கூட்டியே அவர்கள் அறிவித்துவிட்டனர் எனவும், மாகாண முதலமைச்சர்  பதவியை இலக்குவைத்தே அவர்கள் களமிறங்கவுள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.

பதுளை, பொலனறுவை மற்றும் குருநாகல் மாவட்டங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் மூவரே இவ்வாறு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவரும் சவாலை ஏற்றி மாகாண முதலமைச்சர் பதவிக்காகப் போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.