இன்றும் சில நகரங்களை முடக்குவதற்கு தீர்மானம்
20.08.2021 05:00:00
கொவிட்-19 பரவல் காரணமாக இன்றும் சில நகரங்களை முடக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மாத்தறை ஊருபொக்க நகரம் மற்றும் ஹிக்கடுவை நகரம் என்பன இவ்வாறு முடக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், காலி மாவட்டத்தின் ஹபராதுவ மற்றும் மொனராகலை மாவட்டத்தின் படல்கும்புர முதலான நகரங்களை நாளை முதல் முடக்குவதற்கு வர்த்தக சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இதேநேரம், குருநாகல் மாவட்டத்தில் வாரியபொல நகரம் நாளை மறுதினம் முதல் முடக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.