வசூலில் அதகளம் செய்யும் மோகன்!

20.06.2024 08:30:53

விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் தயாரிப்பில் எல்மா பிக்சர்ஸ் என் எத்தில்ராஜ் வெளியீட்டில் 'வெள்ளி விழா நாயகன்' மோகன் நடிப்பில் ஜூன் 7 அன்று உலகெங்கும் வெளியான 'ஹரா', திரையரங்குகளில் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது. 

திரைக்கு வந்து இரண்டு வாரங்களுக்கு பிறகும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'ஹரா', அனைத்து தரப்பு ரசிகர்களை குறிப்பாக பெண்கள் மற்றும் இளம் தலைமுறையினரை ஈர்த்து வருகிறது. இதன் மூலம் இன்றும் அவர் 'வெள்ளி விழா நாயகன்' தான் என்பதை மோகன் நிரூபித்துள்ளார். 

தொடக்கத்தில் தமிழகத்தில் 150-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான 'ஹரா', ரசிகர்களின் வரவேற்பை தொடர்ந்து இன்னும் அதிகமான திரைகளில் திரையிடப்பட்டது.