பதவி விலகத் தயாராகும் மகிந்த !

02.05.2022 18:36:18

அரசாங்கத்திற்குள் நடந்த பல சுற்றுப் பேச்சுவார்த்தையின் பின்னர்,வரும் புதன் கிழமை அன்று நாடாளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை நிகழ்த்தி விட்டு, பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்கள் தனது பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அரச தலைவர் மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுன அணியில் இருந்து விலகி, சுயாதீனமாக இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியுடன் இன்று முற்பகல் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே பசில் ராஜபக்ச, பிரதமரின் இம் முடிவு தொடர்பாக அறிவித்துள்ளார்.

இதன்போது சிறிலங்கா பொதுஜன பெரமுனவை சாராத ஒருவரை பிரதமராக தெரிவு செய்யுமாறும் இவர் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.