
சீனாவுக்கு 100 சதவீத வரி!
இந்தியா, சீனாவுக்கு வரிகளை அதிகப்படுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஐரோப்பிய நாடுகளை வலியுறுத்திய நிலையில் அமெரிக்காவிற்கு பதில் அளித்துள்ளது சீனா.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி இந்தியாவிற்கு 50 சதவீதம் வரிகளை அதிகரித்துள்ளது அமெரிக்கா. மேலும் சீனாவுக்கும், இந்தியாவுக்கு அதிக வரிகளை விதிக்க சொல்லி ஐரோப்பிய கூட்டமைப்பு, ஜி7 நாடுகள் அமைப்பு உள்ளிட்டவற்றையும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது அமெரிக்கா.
இந்நிலையில் அமெரிக்காவின் இந்த செயல்களுக்கு பதில் அளிக்கும் விதமாக பேசியுள்ள சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ “சீனா ஒரு பொறுப்பான அமைதியை விரும்பும் நாடு. போரால் பிரச்சினைகளை தீர்க்க முடியாது. வரி மற்றும் பொருளாதார தடைகளால் பிரச்சினை இன்னும் சிக்கலானதாகதான் மாறும், சீனா போர்களில் பங்கேற்க திட்டமிடுவதில்லை. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதே சீனாவின் நோக்கமாகும்” என கூறியுள்ளார்.