தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை

21.10.2021 10:32:25

 வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. குமரிக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாடு, புதுவையில் அநேக இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.