பொதுப்போக்குவரத்தில் செல்பவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் – லண்டன் முதல்வர்

14.07.2021 10:23:21

ஜூலை 19 க்கு பின்னர் இங்கிலாந்தில் பொதுப்போக்குவரத்தில் செல்பவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக லண்டன் முதல்வர் சாதிக் கான் தெரிவித்துள்ளார்.

கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் முதலவர் சாதிக் கான் தெரிவித்தார்.

மேலும் பொது இடங்கள் மற்றும் சனத்தொகை அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.