சிம்பு படத்தைக் கைவிட்டாரா கமல்ஹாசன்?
பத்து தல படத்துக்குப் பிறகு சிம்பு அடுத்து தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்துவரும் நிலையில் சிம்பு படத்துக்காக நீளமாக முடிவளர்த்து கெட்டப்பை எல்லாம் மாற்றியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டெஸ்ட் ஷூட் ரகசியமாக சென்னையில் நடந்து முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் மட்டுமே இதுவரை ரிலீஸானது. படம் பற்றிய வேறு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்த படத்துக்கான முன்தயாரிப்புப் பணிகள் முடிய இன்னும் சில மாதங்கள் ஆகும் என சொல்லப்பட்டது.
இதற்கிடையில் சிம்பு கமல்ஹாசனின் தக்லைஃப் படத்தில் நடிக்க சென்றுவிட்டார். இந்நிலையில் கமல்ஹாசன் இந்த படத்தின் அதிக பட்ஜெட் காரணமாக தேசிங் பெரியசாமி படத்தைக் கைவிட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் இது சம்மந்தமாக சிம்புவிடம் பேசி எதிர்காலத்தில் வேறு ஒரு படத்தில் இணைவோம் என்றும் கூறிவிட்டாராம். இந்த படத்துக்காக கொடுத்த அட்வான்ஸை தக்லைஃப் படத்துக்காக பயன்படுத்திக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்துக்காக சில ஆண்டுகள் உழைப்பை போட்ட தேசிங் பெரியசாமி அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதுதான் பரிதாபமானதாக உள்ளது.