பிலிப்பைன்ஸில் வலுவான நிலநடுக்கம்!

17.10.2025 14:47:30

தெற்கு பிலிப்பைன்ஸில் வெள்ளிக்கிழமை (17) 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. 

 

இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் நாட்டைத் தாக்கிய ஒரு வாரத்திற்குப் பின்னர் இது நிகழ்ந்தது.

நிலநடுக்கத்தினால் உண்டான உயிரிழப்புகள் அல்லது சேதம் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.

பிலிப்பைன்ஸின் சூரிகாவ் டெல் நோர்டே மாகாணத்தில் உள்ள டாபா நகராட்சிக்கு அருகில் சுமார் 69 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக USGS தெரிவித்துள்ளது.

மிண்டானாவோ தீவின் கிழக்குப் பகுதியை 7.4 மற்றும் 6.7 ரிக்டர் அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் உலுக்கி, குறைந்தது எட்டு பேரைக் கொன்ற ஒரு வாரத்திற்குப் பின்னர் இந்த நிலநடுக்கம் பிலிப்பைன்ஸை தாக்கியுள்ளது.

அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, மத்திய பிலிப்பைன்ஸில் உள்ள செபு மாகாணத்தில் சில நாட்களுக்கு முன்பு 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 76 பேரைக் கொன்றது மற்றும் 72,000 வீடுகளை அழித்தமையும் குறிப்பிடத்தக்கது.