
சஷீந்திர ராஜபக்ஷ கைது.
முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரகலய போராட்டத்தின் போது தீக்கிரையாக்கப்பட்ட அரசாங்க காணியில் கட்டப்பட்ட வீடு தொடர்பாக, வேறொரு நபர் மூலம் இழப்பீடு பெற்ற சம்பவம் குறித்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரகலய போராட்ட காலப்பகுதியில் செவனகல - கிரியிப்பனார பகுதியில் தீக்கிரையாக்கப்பட்ட அரச காணி தொடர்பாக, வேறொரு நபர் மூலம் அரசிடம் இருந்து இழப்பீடு பெற்ற சம்பவம் குறித்து, முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ இன்று (06) காலை கைது செய்யப்பட்டார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் அவர் நுகேகொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ பின்னர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், தற்போது அவரிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சஷீந்திர ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.