சொகுசு விடுதியில் அதிமுக MLAகள்.
|
தமிழக அரசியலில் இப்போது புதுச்சேரி பூரணாங்குப்பம் நட்சத்திர விடுதியில் அரங்கேறி வரும் நிகழ்வுகள், 2017ம் ஆண்டு இந்தியாவையே அதிரவைத்த கூவத்தூர் சம்பவத்தை அப்படியே கண்முன்னே நிறுத்துகின்றன. தவெகவுக்கு அதிமுக ஆதரவு கொடுக்கலாம் என சொல்லப்படும் நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் பூரணாங்குப்பம் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழக சட்டசபை தேர்தல் 2026 தகவல்களுக்கு ஒன்இந்தியா தமிழுடன் இணைந்திருங்கள் தமிழ்நாடு அரசியலில் 2017ல் நடந்த கூவத்தூர் அரசியலை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். |
|
இப்போது தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழல் உருவாகியுள்ள நிலையில், மீண்டும் ஒரு கூவத்தூர் அரசியல் நடக்கிறது. அதிமுக எம்எல்ஏக்கள் மீண்டும் இப்போது ஒரு ரிசார்ட்டிர்கு அழைத்துச் செல்லப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கண்டறிக செய்தி தொகுப்பு செய்தித்தாள் சந்தா இந்திய உணவு இந்திய கலாச்சாரம் தமிழ் செய்திகள் கூவத்தூர் 2017 பிப்ரவரியில் ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியபோது, எடப்பாடி பழனிசாமி தரப்பு தனது பெரும்பான்மையை நிரூபிக்க அதிமுக எம்.எல்.ஏ-க்களை கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் தங்கவைத்தது. இன்று கிட்டத்தட்ட மீண்டும் அதே சம்பவம் நடக்கிறது. 108 இடங்களைப் பெற்றுள்ள விஜய்யின் தவெக ஆட்சி அமைக்கக் கூடுதலாக 10 எம்எல்ஏக்கள் தேவை.. தவெகவுடன் கூட்டணி அமைக்க அதிமுகவில் ஒரு தரப்பினர் ஓகே சொல்லும் நிலையில், அவர்கள் புதுச்சேரி ரிசார்ட்டில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிவி சண்முகம் அன்று சசிகலா மற்றும் தினகரன் முன்னின்று கூவத்தூர் வியூகத்தை வகுத்தனர். அதன் விளைவாக எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார். இன்று எடப்பாடியின் நேரடி எதிர்ப்பையும் மீறி, சி.வி.சண்முகம் இந்த 'ரிசார்ட்' அரசியலை முன்னெடுத்துள்ளார். மேலும், தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக செங்கோட்டையன் மற்றும் சி.வி.சண்முகம் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. 5 புதுச்சேரி பூரணாங்குப்பத்தில் உள்ள இந்த சொகுசு நட்சத்திர விடுதியில் சுமார் 25 அதிமுக எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் முதல்முறை வெற்றிபெற்ற இளம் எம்எல்ஏக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தங்கியுள்ளவர்களைத் தவிர புதியவர்களுக்கு அனுமதி கிடையாது என ரிசார்ட் தரப்பில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தவெக நிர்வாகி செங்கோட்டையன் உடன் சி.வி.சண்முகம் நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் சில முக்கியமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.. முதலில் 'துணை முதலமைச்சர்' பதவி தனக்கு வேண்டும் என சிவி சண்முகம் கேட்கிறார். இது தவிர அமைச்சரவையில் சில முக்கியமான துறைகள் தங்களுக்கு வேண்டும் என்றும் சிவி சண்முகம் தரப்பு கேட்கிறதாம். தவெகவுக்கு ஆதரவு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறி வரும் நிலையில், அதையும் தாண்டியே சிவி சண்முகம் இந்த முயற்சியை எடுத்து வருவதாகத் தெரிகிறது. ஏற்கனவே தவெகவுக்கு ஆதரவு அளிக்கக் காங்கிரஸ் முடிவெடுத்துவிட்ட நிலையில், இன்னும் 5 இடங்களே தேவைப்படுகிறது. இந்தச் சூழலில் அதிமுகவில் நடக்கும் இந்த மாற்றங்கள் உற்றுக் கவனிக்கப்படும் விஷயங்களாக மாறியுள்ளது. 2017 கூவத்தூர் சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் இப்போது புதுச்சேரி ரிசார்ட் அரசியல் களைகட்டியுள்ளது. 108 சீட்களை வைத்துக்கொண்டு விஜய்யால் தனித்து ஆள முடியாது என்பதை உணர்ந்துள்ள அதிமுக தரப்பு, 'துணை முதலமைச்சர்' பதவியைக் குறிவைத்துக் காய்நகர்த்துகிறது. |