பாகிஸ்தான் வாகன தொடரணி மீதான தாக்குதல்
22.11.2024 08:12:16
பாகிஸ்தானின் குர்ரம் மாவட்டத்தின் ஓசாட் பகுதியில் வியாழக்கிழமை (21) பயணிகள் வாகனங்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.
தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பரசினாரில் இருந்து பெஷாவர் நோக்கி பயணித்த வாகனத் தொடரணியை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் வெவ்வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைகளை கண்டறிய விசாரணை நடைபெற்று குர்ரம் சட்ட அமைச்சர் அஃப்தாப் ஆலம் தெரிவித்தார்.