300 இந்தியர்களுக்கு இலவச தங்குமிடம்- இந்திய கலாசார அமைப்பு உதவி
26.12.2020 11:56:06
சவுதி, குவைத், ஓமன் நாடுகள் எல்லையை மூடியதால் துபாயில் சிக்கியுள்ள 300 இந்தியர்களுக்கு இலவச தங்குமிடம் அளித்து இந்திய கலாசார அமைப்பு உதவி செய்தது.
சவுதி அரேபியா மற்றும் குவைத் மற்றும் ஓமன் நாடுகளில் இந்தியர்கள் அதிக அளவில் வேலை பார்த்து வருகின்றனர். மேற்கூறிய இந்த நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து நேரடி விமான சேவை கிடையாது. எனவே இந்தியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்று அங்கிருந்து சவுதி அரேபியா, குவைத் மற்றும் ஓமன் செல்வது வழக்கம். இந்த நிலையில் இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக சவுதி அரேபியா, குவைத் மற்றும் ஓமன் நாடுகள் தங்களது எல்லைகளை மூடியதோடு சர்வதேச விமான போக்குவரத்துக்கு முழுவதுமாக தடை விதித்துள்ளது.