ஜேர்மனியில் துப்பாக்கிப் பிரயோகம் – நால்வர் காயம்!
ஜேர்மனியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
ஜேர்மனியின் பெர்லின் மாகாணம் கிருஸ்பெர்க் மாவட்டத்தில் சமூக ஜனநாயக கட்சி தலைமையை அலுவலகம் அமைந்துள்ளது.
குறித்த கட்சி தலைமை அலுவலகம் அருகே நேற்று துப்பாக்கியுடன் வந்த மர்மநபர் அப்பகுதியில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இந்த தாக்குதலில் 3 பேருக்கு துப்பாக்கிக்குண்டு காயம் ஏற்பட்டது. மேலும், ஒருவர் தனது உயிரை காப்பற்றிக்கொள்ள அருகில் இருந்த கால்வாய்க்குள் விழுந்ததில் அதில் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால், பொலிஸார் வருவதற்கு முன்னதாகவே துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபர் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார்.
அவரை தேடும்பணியை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், காயமடைந்த நால்வரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.