வாடகை தாய் மூலம் பிறந்த குழந்தை..
கடந்த 2018 ஆம் ஆண்டு பாடகர் நிக் ஜோனாசை, பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மால்தி மேரி என்ற பெண் குழந்தை உள்ளது.
பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். கடந்த 2018 ஆம் ஆண்டு பாடகர் நிக் ஜோனாசை, பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இருவரும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தனர். அந்த பெண் குழந்தையின் பெயர் மால்தி மேரி. இந்த குழந்தை பிறந்ததை இந்த தம்பதியினர் அவர்களது சமூக வலைதள பக்கத்தின் மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினர்.
குழந்தைக்கு மருத்துவ ரீதியாக சில சிக்கல்கள் இருந்ததால் சில நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியது இருந்தது. இதனால் பல மாதங்களாக தனது குழந்தையின் முகத்தை வெளி உலகிற்கு காட்டாமலே இருந்து வந்தார் பிரியங்கா. இந்நிலையில் பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனஸ் மற்றும் அவரின் சகோதரர்கள் கலந்துகொண்ட 'வாக் ஆஃப் ஃபேம்' (Walk of Fame) நிகழ்ச்சியில் தனது மகளோடு கலந்து கொண்டார்.
இதில் பிரியங்கா சோப்ரா தனது மகள் 'மால்தி மேரி' முகத்தை முதன்முறையாகப் பத்திரிகையாளர்களுக்குக் காட்டினார். அதோடு குடும்பத்தோடு குரூப் போட்டோ எடுக்கும்போதும் குழந்தையின் முகத்தை அனைவருக்கும் காட்டினார்.