பதவி விலகுமாறு பிரதமரிடம் ஜனாதிபதி கோரிக்கை!

06.05.2022 19:47:33

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே ஜனாதிபதியால் இந்த கோரிக்கை யை முன்வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு பல அமைச்சரவை அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், சில அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதியின் இந்த தீர்மானத்திற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.