வாடகை தாயாக நடிக்கும் சமந்தா
29.10.2022 15:59:34
அதிரடி சண்டையுடன் திகில் கதையம்சத்தில் தயாராகும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. சமந்தா பேமிலிமேன் 2 வெப் தொடரில் நடித்த பிறகு இந்திய அளவில் முன்னணி நடிகை என்ற நட்சத்திர அந்தஸ்தை பெற்று இருக்கிறார். சமந்தாவின் யசோதா டிரெய்லரை தமிழில் சூர்யா, தெலுங்கில் விஜய்தேவரகொண்டா, கன்னடத்தில் ரஷ்கித் ஷெட்டி, மலையாளத்தில் துல்கர் சல்மான், இந்தியில் வருண் தவான் ஆகியோர் வெளியிட்டு உள்ளனர்.