
முல்லைத்தீவு மல்லாவி யோகபுரம் சிவாலயத்தின் வருடாந்த மகோற்சவம் !
27.03.2021 08:51:45
முல்லைத்தீவு மல்லாவி யோகபுரம் சிவாலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று (சனிக்கிழமை) நடைபெற்றுள்ளது
முல்லைத்தீவு யோகபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ யோகாம்பிகை சமேத யோகபுரநாதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
ஒன்பதாம் நாளான இன்று தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக இடம் பெற்றுள்ளது.
பக்தர்கள் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஆலய தேர்த் திருவிழாவில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.