தகவல் கொடுத்தால் ரூ.37 கோடி

07.11.2021 14:53:11

அமெரிக்காவில் போதை பொருள் கடத்தல் வழக்கு குற்றவாளிகளான ஆரேலியானோ கஸ்மன், ருபர்டோ சால்குயேரோ, ஜோஸ் சால்குயேரோ மற்றும் ஹெரிபெர்டோ சால்குயேரோ என்ற நான்கு பேர் தேடப்பட்டு வருகின்றனர். இதில் ஆரேலியானோ என்பவர், பிரபல போதை பொருள் கடத்தல் மன்னரான எல் சாப்போவின் சகோதரர். இந்நிலையில், 'இவர்கள் நான்கு பேர் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு தலா37 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும்' என, அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது