வரலட்சுமி படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது
கன்னடத்தில் இருமுறை மாநில விருதுகளை பெற்ற இயக்குனர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் சந்தோஷ் பிரதாப் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'கொன்றால் பாவம்'. கொன்றால் பாவம் 1981-களில் நடக்கும் கிரைம் திரில்லர் கதையான இந்த திரைப்படம் மோகன் ஹப்பு எழுதிய பிரபல கன்னட நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது. இதில், ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயக்குமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன், ஸ்ரீனிவாசன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மாதவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கொன்றால் பாவம் பிரதாப் கிருஷ்ணா மற்றும் மனோஜ் குமார் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இந்நிலையில், 'கொன்றால் பாவம்' படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சினிமா துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 1-ஆம் தேதி ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.