கோட்டாபயவுக்கு இந்தியாவும் கதவடைப்பு

13.07.2022 00:06:00

 

இந்தியாவும் கதவடைப்பு 

அரச அதிபர் கோட்டாய ராஜபக்சவுக்கு அமெரிக்காவை தொடந்து இந்தியாவும் கதவடைப்பு செய்து விட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அமெரிக்காவின் நிராகரிப்பு

அமெரிக்கா செல்வதற்காக அரச அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ சமர்ப்பித்த விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மேற்கோள்காட்டி 'தி இந்து' என்ற இந்திய நாளிதழ் இதனைத் தெரிவித்துள்ளது.

அமெரிக்கக் குடியுரிமையைத் துறந்தவர்களுக்கு விசாக்கள் திரும்ப வழங்கப்படுவதில்லை என்றும், குடும்ப உறுப்பினர் திடீர் மரணம் அல்லது மருத்துவ சிகிச்சை போன்ற மிக விசேஷமான சூழ்நிலையில் மட்டுமே விசா வழங்கப்படுவதாகவும் தூதரகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

விமானத்தை தரையிறக்க இந்தியா அனுமதி மறுப்பு

இதேவேளை, இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் அரச அதிபர் இந்தியா செல்ல எதிர்பார்த்துள்ளதாகவும், ஆனால் அந்த விமானத்தை அந்நாட்டு எல்லையில் தரையிறக்க இந்தியா அனுமதி மறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது என அந்த ஊடகம் மேலும் தெரிவிததுள்ளது.