14 வருடங்களுக்கு பின் பிரித்தானிய ஆட்சியில் மாற்றம்

05.07.2024 08:08:30

பிரித்தானியா நாடாளுமன்றத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தோல்விக்கு தான் பொறுப்பேற்றுக்கொள்வதாக ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது.

 

மொத்தம் உள்ள 650 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், பதிவான வாக்கெண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இத்தேர்தலில், இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில், தொழிலாளர் கட்சி 409 இடங்களையும், ரிஷி சுனக்கின் கன்ஷர்வேட்டிக் கட்சி 113 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.

மேலும், இன்னும் சில இடங்களின் முடிவுகள் வெளியாக உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மொத்தமாக 650 நாடாளுமன்ற ஆசனங்களை கொண்ட பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இந்த முறை தொழிலாளர் கட்சி பெரும்பான்மையான ஆசனங்களை கைப்பற்றி ஆட்சியமைக்கவுள்ளது.

அதன்படி, பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக கீர் ஸ்டார்மர் (Keir Starmer) நியமிக்கப்படவுள்ளார்.

14 ஆண்டுகளுக்குப் பின்னர், தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளமை அங்கு சிறப்பம்சமாகும்.

இது குறித்து, தொழிலார் கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் உரையாற்றுகையில் “மாற்றம் இப்போது தொடங்குகிறது” என தெரிவித்தள்ளார்.

இதேவேளை, பிரித்தானியா நாடாளுமன்றத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தோல்விக்கு தான் பொறுப்பேற்றுக்கொள்வதாக ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.