"அதிகாரிகள் சொல்றதை குருட்டுத்தனமா கேட்காதீங்க" .
|
தவெக ஆட்சியமைத்து 6 மாதங்களாக போகிறது. தவெக கொண்டு வந்த திட்டங்களை விட அறிவித்து வாபஸ் பெற்ற திட்டங்கள் அதிகம். பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமை செயலகம், ஆர்டிஐ திருத்தம் என தவெகவின் ரிவர்ஸ் கியர் பார்முலா பெரும் சர்ச்சையாகியுள்ளது. தவெக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் எம்பி கார்த்தி சிதம்பரம், அதிகாரிகளின் சொல்லை கேட்டு குருட்டுத்தனமாக ஆட்சி செய்ய கூடாது என தவெகவை விமர்சித்துள்ளார். சென்னையில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். |
|
அப்போது அவர் கூறுகையில், "தகவல் அறியும் உரிமை சட்டத்தில், சட்டம் ஒழுங்கு விலக்கு அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். அதை அரசு வாபஸ் பெற்றுவிட்டது. அதிகாரிகளின் ஆலோசனைப்படி அரசு நடக்க கூடாது. அரசியல் ரீதியான முடிவுகளை முதலமைச்சர், அமைச்சர்கள் எடுக்க வேண்டும். அதிகாரிகள் சொல்வதை குருட்டுத்தனமாக பாலோ செய்ய கூடாது. அரசியல் ஆளுமை தான் நிர்வாகம் செய்ய வேண்டும். இவர்கள் முதல்முறை ஆட்சியில் உள்ளனர். இவர்களுக்கு நிர்வாகம் செய்வதற்கான அனுபவம் இல்லை. அதன் வெளிப்பாடு தான். ஏதோ யூகத்தில்கத்தில் இயங்கும் அரசாக உள்ளது. அப்படி இருக்க கூடாது. இதில் நிறைய அனுபவம் கிடைத்திருக்கும். இனிமேல் அதிகாரிகள் மட்டுமே முடிவு செய்ய அனுமதிக் மாட்டார்கள் என்று நம்புகிறேன். முக்கிய அரசாணை வெளியிடும்போது முதலமைச்சரும், மூத்த அமைச்சர்களும் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும். தமிழகத்தின் அரசியல் முன்னேற வேண்டும். ஆக்கப்பூர்வமான விவாதங்கள் இருக்க வேண்டும். அரசியல் கொள்கைகளை ஆராய வேண்டும். எல்லாமே பன்ச் டைலாக், ஷார்ட்ஸ், ரீல்ஸ் ஆக இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கட்சியும் அதன் தலைவர்களை பெரிதாக பாராட்டுவார்கள். மாற்றுக்கருத்துகளும் இருக்கும். அப்படித்தான் தவெக, காங்கிரஸ் உறவும். இது தமிழக அரசியல் இலக்கணம். அவர்கள் தங்கள் தலைவரை உயர்ந்த இடத்தில் பார்க்க விரும்புவார்கள். இந்தியாவில் பிரதமராக வேண்டும் என்றால், 272 பாராமன்ற உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். ஏற்க முடியாது எந்த அரசியல் கட்சிக்கு 272 உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அவரவர் விருப்பங்களை சொல்வதாலேயே அரசியல் இலக்கணம் மாறிவிடும். தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. அவர் பதவி விலக வேண்டும். தேர்தல் ஆணையத்தின் மீதும் நம்பிக்கை இல்லை. எஸ்ஐஆர் மூலம் தகுதியான வாக்காளர்களை நீக்க தான் ஆர்வம் செலுத்துகிறார்கள். புதிதாக யாரையும் சேர்க்கவில்லை. பார்ம் 6 கொண்டு வந்துள்ள மாற்றம் சட்டவிரோதமானது. இதை ஏற்க முடியாது" என்றார். |