நகர் குடியிருப்புகளை இடிக்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்ப்பு
28.01.2022 09:28:26
சென்னை ஈஞ்சம்பாக்கம் அருகே பெத்தேல் நகரில் உள்ள குடியிருப்புகளை இடிக்க விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பெத்தேல் நகரில் பல ஆண்டுகளாக வசித்துவரும் மக்களை அப்புறப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என விஜயகாந்த் தெரிவித்தார். பெத்தேல் நகர் மக்களின் கோரிக்கையை ஏற்று பட்டா வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என விஜயகாந்த் கூறியுள்ளார்.