இஸ்ரேலுக்கு அன்டணி பிளிங்கன் விஜயம்!

19.08.2024 08:07:05

தொடர்ந்து 10 மாதங்களாக காசாவில் இடம்பெறும் இப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் அன்டணி பிளிங்கன் இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இஸ்ரேல் – காஸா போர்நிறுத்த கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ள நிலையில், அமெரிக்காவின் ஆதரவுடனான போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்காக அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் அன்டணி பிளிங்கன் இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ளார்.

இதன்போது அன்டணி பிளிங்கன் இஸ்ரேலின் பிரதமர்   நெதன்யாகுவையும் ஏனைய இஸ்ரேலிய தலைவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த சந்திப்பின் பின்னர் பிளிங்கன் பின்னர் எகிப்தின் தலைநகரான  கெய்ரோவிற்கு அன்டணி பிளிங்கன்  பயணிக்கவுள்ளார் எனவும், அங்கு எகிப்திய தலைவர்களுடன் போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் அன்டணி பிளிங்கன் மத்திய கிழக்கிற்கு  ஒன்பதாவது முறையாக பயணத்தை மேற்கொள்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.