பெப்ரவரியில் பல நல்ல திரைப்படங்கள் வரும் : முன்னாள் பிரதமர்

14.01.2022 06:10:25

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் அரசியல் மேடைக்கு செல்வது கடினம் எனவும், எதிர்கால சந்ததியினர் வளமடைவதற்கு சரியான எதிர்காலத்தை உருவாக்க தற்போதைய தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் கட்சியை வழிநடத்தும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி மறுசீரமைக்கப்படும் எனவும், அதற்காக ஏற்கனவே பலர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

குடும்ப அரசியல், பணப்பற்றாக்குறை, தேர்தல் முறையே தடையாக இருப்பதால், இன்றைய அரசியல் களத்தில் இளைஞர்கள் முன்னேறுவது கடினம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் தான் எப்போதும் அரசியல் செய்வதில்லை என்றும், ஓய்வு நேரத்தில் நெட்ஃபிக்ஸ் நிகழ்ச்சிகளை மிகவும் ரசிப்பதாகவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

தொற்றுநோய் காரணமாக, அவர் புத்தகங்களைப் படிப்பதிலும், நெட்ஃபிக்ஸ் பார்ப்பதிலும், பாடல்களைக் கேட்பதிலும், மேடை நாடகங்களைப் பார்ப்பதிலும் நேரத்தை செலவிடுவதாக தெரிவித்துள்ளார்

இந்திய, சீன, ஸ்பானிஷ், தென் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய திரைப்படங்களை அவர் பெரிதும் ரசிப்பதாகக் குறிப்பிட்ட முன்னாள் பிரதமர், பெப்ரவரி 2022-ல் பல நல்ல திரைப்படங்கள் பொதுமக்களுக்கு வரும் என்று பரிந்துரைத்தார்.