விஜய்யை வைத்து சூப்பர் ஹீரோ படம்

07.09.2021 05:39:40

அட்டகத்தி, மெட்ராஸ் படங்களைத் தொடர்ந்து ரஜினியை வைத்து கபாலி, காலா என்ற இரண்டு படங்களை அடுத்தடுத்து இயக்கும் வாய்ப்பினை பெற்றார் பா.ரஞ்சித். அதன்பிறகு ஆர்யா நடிப்பில் அவர் இயக்கிய சார்பட்டா பரம்பரை மெகா ஹிட்டாக அமைந்த நிலையில் அடுத்து பா.ரஞ்சித் எந்த மெகா ஹீரோவை வைத்து படம் இயக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்புகள் எழத் தொடங்கியது.

ஆனால் அவரோ மீண்டும் அட்டகத்தி பாணியில் காளிதாஸ் ஜெயராம், அசோக் செல்வன், துஷாரா விஜயனை வைத்து நட்சத்திரம் நகர்கிறது என்ற காதல் படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தை அடுத்து விக்ரமை வைத்து பா.ரஞ்சித் ஒரு படம் இயக்கப் போவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

இந்தநிலையில் தற்போது அவர் அளித்த ஒரு பேட்டியில், விஜய்யை வைத்து ஒரு சூப்பர் ஹீரோபடம் இயக்கப் போவதாக தெரிவித்துள்ளார். அதோடு, சூப்பர் ஹீரோ என்றால் கற்பனையான விசயங்களை சொல்லப்போவதில்லை. கற்பனைக்கும் நிஜத்துக்கும் உள்ள தொடர்பினை வைத்து ஒரு கதை பண்ணியிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு, விஜய் என் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தால் அவரை சூப்பர் ஹீரோவாகத்தான் நடிக்க வைப்பேன். அதற்கு விஜய் ரொம்ப பொருத்தமாக இருப்பார் என்று டைரக்டர் மிஷ்கினும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.