ஜனாதிபதி உள்ளிட்டவர்களின் சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்க காலக்கெடு!

29.01.2024 17:24:32

ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளின் சொத்து விபரங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது.


ஜனாதிபதி, பிரதமர், அரச உத்தியோகத்தர்கள், ஊடகப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு உயர்மட்ட நபர்களின் சொத்து விபரங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயித்து இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு கடுமையான உத்தரவையும் பிறப்பித்துள்ளது.

இதன்படி, ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசியல்வாதிகள் மற்றும் அரச சேவையில் உள்ள ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் அரச உத்தியோகத்தர்கள் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவிடம் சொத்துக் கடன் அறிக்கைகளைப் பெறுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

மேலும், ஊடகப் பிரதானிகளும் இதில் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு சட்டத்தின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.