நாளையுடன் ஓராண்டு ஆட்சியை பூர்த்தி செய்கிறார் அனுர!

22.09.2025 08:32:03

இலங்கையின் 09ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்று நாளையுடன் (23) ஒருவருடம் பூர்த்தியாகிறது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2021.12.20 ஆம் திகதியன்று தேசிய மக்கள் சக்தியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டு, 2024.09.21ஆம் திகதியன்று நடைபெற்ற 08 ஆவது ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் திசை;சாட்டி சின்னத்தில் போட்டியிட்டார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுரகுமார திஸாநாயக்க 5,634,915 வாக்குகளைப் பெற்று 42,31 சதவீத வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாஸ 4,363,035 வாக்குகளைப் பெற்று 32.76 சதவீத வாக்குகளையும்,புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 2,299,767 வாக்குகளைப் பெற்று 17.27 சதவீத வாக்குகளையும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட நாமல் ராஜபக்ஷ 342,781 வாக்குகளைப் பெற்று 2.57 சதவீத வாக்குகளையும் முறையே பெற்றுக்கொண்டனர்.

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தான் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.