தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி: விஜய் நிலமை?
|
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிகும், அதிமுக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்றும் திமுக பெரும்பான்மையை பார்டரில் வந்து தொட வாய்ப்புள்ளதாக சி.என்.என். நியூஸ் 18 கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் தவெகவிற்கு எதிர்பாராத ட்விஸ்ட் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. |
|
தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு மாதமே உள்ள நிலையில், அரசியல் களம் தகிக்க ஆரம்பித்துள்ளது. திமுக தமிழகத்தில் வரும் தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக + பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பல்வேறு செய்தி நிறுவனங்களும் கருத்துகணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், சிஎன் என் நியூஸ் 18 கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பு படி தமிழகத்தில் மீண்டும் திமுக கூட்டணி கட்சி 113 முதல் 123 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 234 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 117 இடங்களில் வெல்ல வேண்டும் என்ற நிலையில், பார்டரில் திமுக வந்து நிற்கும் என்பது போல சி.என்.என். கருத்து கணிப்பு கூறியுள்ளது. Powered By விஜய்க்கு இரண்டு இடங்கள் தான் அதிமுக கூட்டனி 106 முதல் 116 வரை வெல்லக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் இந்த தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவும் எனத்தெரிகிறது. அரசியல் களத்திற்கு புதிய வரவான நடிகர் விஜய்யின் தவெக 2 முதல் 8 சீட்களை வெல்லக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 234 தொகுதிகளிலும் விஜய் கட்சி தனித்து போட்டியிட தயாராகி வரும் நிலையில், அந்த கட்சிக்கு 10 க்கும் குறைவான தொகுதிகளே கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் திமுக+ 40.1 சதவீதம், அதிமுக+ 38.1சதவீதம், தவெகவுக்கு 14.8சதவீதம் வாக்குகள் கிடைக்கும். என கணிக்கப்பட்டுள்ளது. |